யாழ்ப்பாணம் – காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த முதியவர் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
காரைநகரில் கோரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவரது வீட்டுக்கு அண்மையில் வசித்து வந்த 60 வயதுடைய முதியவர் கடந்த சனிக்கிழமை தொடக்கம் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
மூச்சுத் திணறல் காரணமாக அவர் நேற்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.
கொரோனா தொற்று தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்துக்கான காரணத்தை கண்டறியும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.