கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை, மீண்டும் பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜிஎல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று ஜனவரி மாதம் சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படாது என்று நாடாளுமன்றத்தில் அவர் இன்று அறிவித்தார்.
பரீட்சை நடத்தப்படும் நாள் தொடர்பாக, ஆறு வாரங்களுக்கு முன்னதாக, அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய கொரோனா தொற்று சூழலை கவனமாக ஆராய்ந்த பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், கல்வி அமைச்சர் ஜிஎல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
பல இடங்களில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியாதுள்ள நிலையில், ஆறு இலட்சத்து 21 ஆயிரம் மாணவர்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
டிசெம்பர் மாதம் நடைபெறும் சாதாரணத்தரப் பரீட்சை கொரோனா தொற்றினார் ஜனவரி மாதத்துக்குப் பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.