துப்பாக்கிகள் தொடர்பிலான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு பிரதமர் ரூடோ அரசாங்கம் முழுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தவறியுள்ளதாக சட்டத்தரணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த காலத்தில் இது தொடர்பிலான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பதாக அறிவித்தபோதும் அது தொடர்பில் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.
சட்டவிரோதமாக துப்பாக்கிகளை கொள்வனவு செய்தல் மற்றும் கைத்துப்பாக்கியைக் கட்டுப்படுத்தும் புதிய நடவடிக்கைகளை பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் (Bill Blair) குறிப்பிட்டுள்ளார்.