தொற்று நோய் தடுப்புக்கு பின்னரான பொருளாதார மீட்சிக்கு நூறு பில்லியன் டொலர்களை செலவிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக சமஷ்டி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புதுமையான போட்டிகள் நிறைந்த சந்தை வாய்ப்பினையும், பொருளாதாரத்தினையும் மேம்படுத்துவதையே இலக்காக கொண்டிருப்பதாகவும் சமஷ்டி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனைவிடவும், வணிக வளர்ச்சிகள், மற்றும் மேம்பாட்டிற்காக மேலும் பல ஆதரவுத்திட்டங்களும் அடுத்துவரும் ஆண்டுகளின் வரவு செலவுத்திட்டங்களில் உள்ளடக்க எதிர்பார்த்திருப்பதாகவும் சமஷ்டி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த திட்டங்கள் கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு பின்னரேயே முன்னெடுக்கவுள்ளதாகவும் சமஷ்டி அரசாங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது.