மாவீர்ர் நினைவேந்தல் பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க மூதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாவீர்ர் நாளன்று, நினைவேந்தல் பாடலை முகநூலில் பதிவிட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
மூன்று நாட்களாக காவல்துறையினரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த குறித்த இளைஞன் நேற்று மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார்.
இதன்போது, அவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் கட்டளையிட்டுள்ளார்.