ஒவ்வொரு கனேடியருக்கும் இலவசமாக 10 மருந்தளவு பெறும் வகையில் நாடு பல்வேறு தடுப்பூசி ஒப்பந்தங்களை செய்துள்ளதாக நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தெரிவித்துள்ளார்.
அந்த ஒப்பந்தங்களின் பெறுமதி ஒரு பில்லியன் டொலர்களுக்கும் அதிகமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு கனேடியருக்கும் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி இலவசமாக கிடைக்கும் என்று உறுதியளிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வா றான செயற்றிட்டம் கனடாவின் முழுமையானதும், முதன்மையானதும் முயற்சியாகும் என்று கூறிய அவர், 322 பில்லியன் டொலர்களை, வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கும், மக்களுக்கு உதவுவதற்குமான நேரடி நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.