கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகம் தொடர்பாக ஒன்றாரியோவுக்கு விரைவில் மத்திய அரசாங்கத்திடமிருந்து பதில்கள் தேவை என டக் ஃபோர்ட் வலியுறுத்தினார்.
தடுப்பூசிகள் எப்போது வரும், மத்திய அரசாங்கம் எத்தனை பெறப் போகிறது, அவை எந்த வகையான தடுப்பூசிகள் என்று தனக்கு இன்னும் தெரியாது என்று அவர் பகிரங்கமாக கூறினார்.
நாங்கள் நாளை தடுப்பூசிகளைப் பெறுகிறோம் என்பதை கடைசி நிமிடத்தில் நாம் கண்டுபிடிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகவே தடுப்பூசி கொள்வனவு, விநியோகம், எந்தவகை தடுப்பூசி ஆகிய மூன்று கேள்விகளுக்குமான பதிலை மத்திய அரசாங்கம் வழங்க வேண்டும் என்று அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.