சிறைச்சாலைகளில் நெருக்கடியைக் குறைக்கும் வகையிலான செயற்பாட்டுத் திட்டம் ஒன்றைத் தயாரிக்குமாறு சட்டமா அதிபர் தப்புலெ டி லிவேரா, காவல்துறை மா அதிபர் சீ.டி.விக்ரமரத்னவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், இந்தச் செயற்பாட்டுத் திட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக முன்வைக்குமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலைமையினால் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அடிப்படையில், சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக, நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் ஏற்கனவே காவல்துறை மா அதிபருக்கு அறிவுறுத்தல்களை விடுத்திருந்த நிலையில், இன்று இது தொடர்பான செயற்பாட்டு அறிக்கையை தயாரிக்குமாறு கூறியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.