வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் (kim jong un) சீனாவின் கொரோனா தடுப்பூசியை இரகசியமாக போட்டுக் கொண்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் (kim jong un), அவரது குடும்ப உறுப்பினர்கள், மற்றும் அரசின் உயர் மட்ட நிர்வாகிகள் குழுவும் சீனாவின் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.
இவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக வோஷிங்டனில் உள்ள தேசிய நல சிந்தனைக் குழு மையத்தின் வட கொரியா நிபுணர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை, ஜப்பானிய புலனாய்வு அமைப்பும் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் கிம் ஜொங் (kim jong un) குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக ஜப்பான் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.