வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் சிறிலங்காவில் முதலீடுகள் செய்யத் தயாராக உள்ள போதிலும் அவர்களுக்கு சிறிலங்கா மீதான நம்பிக்கை இன்மையே பிரச்சினையாக உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
எனவே, தேசிய பொருளாதார அபிவிருத்தியில் சிறிலங்கா அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களையும் உள்ளீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
வடக்கிலோ – கிழக்கிலோ கைத்தொழில் வலயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போதுவலியுறுத்தியதோடு இனப்பிரச்சினைக்கான தீர்வின் மூலமே பொருளாதாரத்தினை மேம்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.