நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை கட்டணமின்றி வழங்கவுள்ளதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறியிருந்தார்.
அதன்படி, நாட்டில் உள்ள 12.65 கோடி மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான சட்டம் ஜப்பான் நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
6 கோடி மக்களுக்கு, அமெரிக்காவின் பைசர் நிறுவனத்திடம் இருந்தும், மொடேர்னா நிறுவனத்திடம் இருந்து 2.5 கோடி தடுப்பு மருந்துகளும் வாங்கப்பட உள்ளன. இதற்கு 671.4 பில்லியன் யென் செலவு ஏற்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.