புரவி சூறாவளியால் கிழக்கு மாகாணத்தில் மூவாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணம் சங்கானையில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சூறாவளியால் மன்னார் மாவட்டம் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதோடு 2 ஆயிரத்து 236 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 749 மக்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை மன்னார் நகரில் 831 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 8 ஆயிரத்து 299 குடும்பங்களும் 2 ஆயிரத்து 986 தனிநபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி கரைச்சியில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை முல்லைத்தீவில் 405 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 49 பேரும் திருகோணமலையில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 91 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 575ஆகவும் பாதிக்கப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 252ஆகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.