இலஞ்ச வழக்கில் ஒஸ்ரியாவின் முன்னாள் நிதி அமைச்சருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2000 ஆம் ஆண்டு தொடக்கம், 2007-ம் ஆண்டு வரை ஒஸ்ரியா நிதி அமைச்சராக இருந்த போது, கர்ல் -ஹினிஸ் கிரேசர் (Karl-Heinz Grasser) அரசுக்கு சொந்தமான 60 ஆயிரம் குடியிருப்புகள் விற்பனைக்காக ஏலம் விடப்பட்ட போது தனியார் நிறுவனத்திடம் இருந்து பல மில்லியன் யூரோக்களை லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த இலஞ்ச விவகாரம் தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் கர்ல் -ஹினிஸ் கிரேசர் (Karl-Heinz Grasser) உள்ளிட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடைபெற்று வந்தது.
இன்று நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தனியார் நிறுவனத்திடம் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் லஞ்சம் பெற்றது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வியன்னா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.