ஒன்ராரியோவில் சிறுவர்கள் மற்றும் விசேட தேவை உடையவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்குரிய தகுதிகள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஸ்காபரோ – றூஜ் பார்க் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் 12 வயது வரையான குழந்தை ஒன்றுக்கு 200 டொலர்கள் பெறுவற்காக விண்ணப்பிக்க முடியும்.
அதேநேரம், 21 வயது வரையான விசேட உதவிகள் தேவைப்படும் பிள்ளையொன்றுக்காக 250 டொலர்கள் உதவித்தொகையாக கோர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணபங்களை பெற்றோர்கள் அல்லதுபாதுகாவலர்கள் சமர்ப்பிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஒன்ராரியேரிவில் நாளொன்றுக்கான கொரோனா தொற்றாளர்கிளின் எண்ணிக்கை ஆயிரத்து 780ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.