கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
69 வயதுடைய, பண்டிதன் என்ற தமிழ் மருத்துவரே தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
கொழும்பு- மட்டக்குளியை சேர்ந்த மருத்துவர் பண்டிதன், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர், தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பொதுச் சேவையில் பணியாற்றிய பின்னர், இவர் கொம்பனித்தெரு, மற்றம் மட்டக்குளி பகுதிகளில் தனியார் மருத்துவ சேவைகளை வழங்கி வந்தவர் என்று கூறப்படுகிறது.
மருத்துவர் பண்டிதனே, இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணமான முதலாவது மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.