புரவி புயலின் தாக்கத்தினால், மன்னார் மாவட்டத்தில் கடும் காற்றுடன் பெய்த மழையினால், பெரும்போக நெற்செய்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அரிசிக் கிண்ணம் என்று அழைக்கப்படும் மன்னார் மாவட்டத்தின் 90 வீதமான பெரும்போக நெற் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், வெள்ளம் வடியாத நிலையில், நெற்பயிர்கள் முற்றாக அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் சுமார் 23 ஆயிரத்து 953 ஏக்கரில், பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
விவசாய நிலங்களில் ஒரு அடிக்கு மேலாக வெள்ள நீர் தேங்கியுள்ளது.