முககவசம் அணிவதற்கு எதிர்புக்களை தெரிவித்துவரும் தரப்பினருடன் அல்பேர்ட்டா முதல்வர் ஜேசன் கென்னி (Jason Kenney) பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
எட்மன்டன், கல்கேரி மற்றும் ரெட் டீர் ஆகிய பகுதிகளில் அண்மையில் முககவசம் அணிவதற்கு எதிரான போராட்டங்களை குழுவொன்று முன்னெடுத்திருந்தது.
இந்த குழுவினருடன் நேரடியாக தொடர்பு கொண்ட மாகாண முதல்வர் தற்போதைய நிலைமைகளை அவர்களுக்கு எடுத்துக்கூறினார்.
மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் திடீர் அதிகரிப் பு ஏற்பட்டுள்ளதையும் வரைபு ரீதியான புள்ளிவிபரங்களுடன் அவர்களிடத்தில் தெளிவு படுத்தினார்.
அதுமட்டுமன்றி தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள அவரது நண்பருடன் நேரடியாக பேசுவதன் மூலமாக நிலைமைகளை உணர்ந்து கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.