சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக களமிறங்கிய யாழ்ப்பாண வீரர் வியஸ்காந்த் விஜயகாந்த், முதல் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
லங்கா பிறீமியர் லீக் தொடரில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் கொழும்பு கிங்ஸ் அணிக்கு எதிராக Jaffna ஸ்ராலியன்ஸ் அணி மோதியது.
இந்தப் போட்டியில் நேற்று முதல் முறையாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த 18 வயதுடைய, சுழற்பந்து வீச்சாளர் வியஸ்காந்த் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தார்.
அவர் சர்வதேச டி 20 போட்டியில் நேற்று முதல் முறையாக களமிறங்கி, 4 ஓவர்கள் பந்து வீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
முதல் சர்வதேச போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணியின் தலைவர் அஞ்சலோ மத்யூசின் விக்கெட்டை வீழ்த்திய வியஸ்காந்துக்கு, பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீர்ர்களான மகேல ஜயவர்த்தன, குமார் சங்ககார, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட பலரும் வியஸ்காந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.