தமிழர் மனங்களை புண்படுத்தும் சரத் பொன்சேகாவிற்கா ஜனாதிபதி தேர்தலில் எமது மக்கள் அதிகளவில் வாக்களித்தனர் என்பதை என்னும்போது மன வேதனையை தருகின்றது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை நிராகரித்து சரத் பொன்சேகாவிற்கு எமது மக்கள் வாக்களித்தனர். ஆனால் எமது மக்கள் அவருக்கு வழங்கிய வாக்குகளுக்கு அர்த்தமில்லாது போய்விட்டதாக இப்போது நான் கருதுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். வடக்கில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள புரவி புயல் மாவீர் தினமன்று வந்திருந்தாள் மகிழ்ச்சியடைந்திருபேன் என பொன்சேகா கூறியதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.





