பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்படும் நாள், இன்னும் 3 நாட்களில் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
சசிகலா வரும் 7ஆம் திகதிக்குள் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளது என்ற செய்தி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விடுதலையாகி வரும் சசிகலாவுக்கு அ.ம.மு.க. சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரில் இருந்து சென்னைக்கு வாகனத்தில் வரும், சசிகலாவுக்கு 65 இடங்களில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படும் என்றும் அ.ம.மு.க. கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
சசிகலா சென்னை வந்ததும் அரசியலின் அடுத்தகட்ட நகர்வு பற்றி முடிவு செய்யவுள்ளார், டி.டி.வி. தினகரனுடன் கலந்து பேசி முடிவு எடுப்பார். இது தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அமமுக கட்சியினர் கூறியுள்ளனர்.





