பருத்தித்துறையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து திரும்பி தனிமைப்படுத்தப்பட்டிருந்த பருத்தித்துறை, ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவருக்கு வியாழக்கிழமை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு, நேற்று நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில், அவர்களில் மூவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.