வடக்கு, கிழக்கில் மாவீரர் தினத்தை முன்னிட்டு முகநூலில் பதிவுகளை செய்த சிறுவர்களைக் கைது செய்துள்ளமை வேதனைக்குரியது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணாக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரையின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்யாது வேடிக்கை பார்த்துக் கொண்டு முகநூலில் பதிவுகளை செய்த சிறுவர்களைக் கைது செய்துள்ளனர்,
தேவையில்லாத விடயங்களில் அரசாங்கம் தமது வீரத்தை காட்டுகிறது, நினைவுத் தூபிகளை உடைத்து நாசமாக்குகின்றனர், கார்த்திகை தினத்தில் கூட கோவிலில், வீடுகளில் விளக்கு போட்டமைக்காக கைதுகள், தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன
சஹ்ரானை வைத்துக் கொண்டு முஸ்லிம் சமூகத்தை ஒடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது, சஹ்ரான் உருவாக அரசாங்கமே காரணம்.
அளுத்கம சம்பவத்தை யார் உருவாக்கியது ஏன் நீதிமன்றத்தை நாடி நியாயம் கேட்கின்றனர் என்று சிந்தித்துப் பாருங்கள் என்றும் குறிப்பிட்டார்.