உயிரிழந்த ஈரானிய அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே (Mohsen Fakhrizadeh) படுகொலை நடந்த நாளில் அவரது பாதுகாப்பு குழுவினரால் எச்சரிக்கப்பட்டதாக அவரது புதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தமது தந்தை படுகொலை செய்யப்பட்டபோது நான்கு அல்லது ஐந்து தடவை துப்பாக்கி சூட்டுக்குள்ளாகியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் அவர்களது தந்தையார் தெஹ்ரானுக்கு அருகிலுள்ள
ஒரு திட்டமிடப்பட்ட கூட்டத்திற்கு செல்ல முடிவெடுத்திருந்தார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, இவரது கொலைக்குப் பின்னர் அமெரிக்காவின் ஒப்புதலுடன் இந்த படுகொலையை இஸ்ரேல் செய்ததாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது..