அமெரிக்க மக்களுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பைசர் (Pfizer) மற்றும் மொடேர்னா (moderna)ஆகிய 2 நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையை முடித்து உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்ற நிலையில், அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
“தடுப்பூசி சாத்தியமில்லை என யாவரும் நினைத்திருந்த நிலையில், எங்களது தடுப்பூசி வந்து கொண்டிருக்கிறது.
அவை அடுத்த வாரம் பயன்பட்டுக்கு வருகின்றன. நாங்கள் தடுப்பூசி போட தொடங்கப் போகிறோம். நிறைய பேருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதை செய்து முடிக்க வேறொரு நிர்வாகமாக இருந்தால், 5 ஆண்டுகள் எடுத்திருக்கும். நாங்கள் அதை 7 மாதத்தில் செய்து முடித்துள்ளோம்.