கொரோனா தடுப்பூசிகளுக்கான அனுமதி கிடைத்தவுடன் விநியோகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தயாராகவுள்ளதாக நேட்டோவின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் டேனி ஃபோர்டின் (Dany Fortin) தெரிவித்தார்.
கனடாவில் கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கான பொறுப்பை ஏற்றுள்ள அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்கணாலின்போது இந்த விடயத்தினை தெரிவித்தார்.
கனடியர்களுக்கு நடுநிலைமையுடன் செயலாற்றுவதையே எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முதலாவது கட்டம், இரண்டாவது கட்டம் என்று தடுப்பூசிகளை தடையின்றி விநிநோகிப்பதனை இலக்காக கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.