புரெவி புயல் மற்றும அதனைத் தொடர்ந்து நீடிக்கும் கடும் மழையுடன் கூடிய காலநிலையினால், நெடுந்தீவு பிரதேசம், பலத்த பாதிப்புகளைச் சந்தித்துள்ளதாக நெடுந்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் பத்திமாதாசன் லீலியான் குறுஸ் தெரிவித்துள்ளார்.
“சீரற்ற காலநிலையினால், நெடுந்தீவுக்காக படகுப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.
புயல், மழை மற்றும் கடற்கொந்தளிப்பினால், மீன்பிடிப் படகுகள் பாறைகளுடன் மோதி சேதமடைந்துள்ளன. வலைகளும், படகுகளும், கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.
அத்துடன், கரையோரப் பகுதிகள், கடுமையாக கடல் அரிப்புக்குள்ளாகியுள்ளன.“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.