கிழக்கு லடாக்கில் கடுமையான பனிப்பொழிவுக்கு ஈடுகொடுக்கக் கூடிய திபெத் இளைஞர்களை படையில் சேர்ப்பதில் சீனா ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்தியாவும், சீனாவும் தமது படைகளைக் குவித்து வைத்துள்ள கிழக்கு லடாக் எல்லையில் வெப்பநிலை, மறை 40 டிகிரி செல்சியசுக்கும் கீழ் சென்றுள்ளது.
இதனால், கடும் குளிரை தாங்க முடியாமல், சீன படைவீரர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.குளிரினால், சீன படையினர் பலர் இறந்து வருகின்றனர்.
எனினும், அவர்களின் பெற்றோர், உறவினர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்திருக்க வேண்டும், தலாய்லாமாவுடன் தொடர்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டும், வெளிநாட்டு அமைப்புக்களுடன் தொடர்பு வைத்திருக்க கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால், லடாக் பகுதியில் பணியில் ஈடுபடுத்த திபெத் இளைஞர்களை சேர்ப்பதற்கு சீன இராணுவம் ஆர்வம் காட்டி வருகிறது.