தமிழீழ தேசியப் பூவான கார்த்திகைப் பூவை ஒளிர விடப்பட்ட விவகாரம் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் பிரித்தானியாவிடம் அதிருப்தியை வெளியிடவுள்ளது.
மாவீரர் நாளன்று பிரித்தானிய நாடாளுமன்றமான வெஸ்ட்மினிஸ்டர் கட்டடத்தின் மீது கார்த்திகைப் பூ ஒளிர விடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.
இது குறித்து சிறிலங்கா அரசாங்கம் அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், பிரித்தானிய தூதுவர் சாரா ஹூல்டனை சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நாளை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்போது, கார்த்திகைப் பூ பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஒளிரவிடப்பட்டதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் அதிருப்தியை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.