விவசாயிகளின் போராட்டம் 11 ஆவது நாளாக நீடிக்கும் நிலையில், நாளை நடைபெறவுள்ள நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் பல ஆதரவு வழங்கி வருகின்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் புராரி மைதானத்திலும், டெல்லியின் எல்லைப்பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, வேளாண் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. விவசாயிகளை திருப்திப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
அதாவது, விவசாயிகளுடன் மத்திய அரசு 5ஆம் சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டப்போதும், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. 6 ஆம் சுற்று பேச்சுவார்த்தை எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.