கொரோனா வைரசுக்கு எதிராக மருந்தைப் பெறுவதற்காக கேகாலை மாவட்டத்தில் உள்ள சுதேச மருத்துவர் ஒருவரின் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரசை தடுக்கக் கூடிய ஆயுர்வேத மருந்தை தயாரித்துள்ளதாக, சுதேச மருத்துவர் தம்மிக்க பண்டார அறிவித்திருந்தார்.
இதையடுத்து, சுகாதார அமைச்சர் மருத்துவரின் வீட்டிற்கு சென்று, அவர் தயாரித்த பாணி மருந்தினை அருந்திச் சோதனை செய்திருந்தார்.
இந்த நிலையில், கேகாலை, ஹெட்டிமுல்ல உமுகம பகுதியில் உள்ள மருத்துவரின் மருத்துவனையில், 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த மருந்தைப் பெறுவதற்காக இன்று ஒன்று கூடியுள்ளனர்.
இலவசமாக வழங்கப்படும் இந்த பாணி மருந்தைப் பெற்றுக் கொள்வதற்காக, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த 120 காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றறன.