தமிழ் அரசியல் கைதிகள் என எவரும் சிறைச்சாலைகளில் இல்லை என்று, அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தீவிரவாதக் குற்றச்சாட்டுகளில், வடக்கு கிழக்கில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீ்ழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை, அரசியல் கைதிகளாக கருத்தில் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைகளில் உள்ள கைதிகள் குற்றங்களின் அடிப்படையில் தண்டிக்கப்பட்டுள்ளனரே தவிர, அவர்களின் இனத்தை அடிப்படையாக கொண்டு, தண்டிக்கப்படவில்லை என்றும், அமைச்சர் கம்மன்பில கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் தண்டனைக் குறைப்பு மற்றும் குறிப்பிட்ட கைதிகளை விடுவிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த அரசியல் கைதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளனரா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.