மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நீதி அமைச்சர் அலி சப்ரியினால் ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு, விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டன.
அதுமட்டுமன்றி பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவின் உத்தரவிற்கு அமைய, காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.