மினுவாங்கொட ஆடை தொழிற்சாலை கொரோனா கொத்தணி உருவாகுவதற்கு உக்ரேன் நாட்டவர்களே காரணம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்ட அவர், இது தொடரர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் , “மினுவங்கொட கொத்தணி உருவான பிரன்டிக்ஸ் நிறுவன தொழிலாளர்களுக்கு இந்தநோய் பரவிய விதம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெறுகின்றது.
வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர்களிடம் இருந்தே இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
அதன் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்கும் போது சீதுவ ரமாதா ஹோட்டலில் தங்கியிருந்த உக்ரேன் நாட்டு விமான பணியாளர்களுக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.