கனடாவின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் சந்தையை மேம்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்புக்களை நல்குமாறு பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
தற்போதைய பண்டிகைக்காலத்தில் உள்ளூர் கடைகளில் இருந்து பரிசுப்பொருட்களையும், உணவுப் பண்டங்களையும் கொள்வனவு செய்வதிலிருந்து அச்செயற்பாட்டினை ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, புதிய இயல்புநிலை திரும்புகின்றபோது நாட்டின்பொருளாதார மீள்எழுச்சிக்கு நாம் ஒருவருக்கு ஒருவர் கைகொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.





