தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யாராலும் தடை செய்ய முடியாது என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தடைசெய்ய வேண்டும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட போதே,இரா.சம்பந்தன் இவ்வாறு கூறியுள்ளார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியாக செயற்பட்டதில்லை.
கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் ஆதரித்தார்கள் என்பதற்காக, அதை விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சி என்று எவரும் கூறமுடியாது.
தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, நாடாளுமன்றத்திற்கும், வட மாகாண சபை மற்றும் ஏனைய உள்ளூராட்சி அமைப்புகளினது உறுப்பினர்களாகவும், மக்கள் தேர்வு செய்துள்ளனர்.
பல நாடுகளுடன் கூட்டமைப்பு நட்புறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளது.
இத்தகைய அரசியல் கட்சியை தடை செய்ய யாருக்கும் உரிமை இல்லை” என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.





