தமிழர் பகுதிகளில் உள்ள 44 சதவீத நிலங்களை வன வளத் திணைக்களம், அபகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால், தமிழ் மக்கள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று, நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போது, குறிப்பிட்டுள்ளார்.
“வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் கால்நடை பண்ணையாளர்கள் அதிகமாக உள்ளனர்.
இவ்வாறான நிலையில், கால்நடை வளர்ப்புக்கு தடையைய ஏற்படத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்க இடமளிக்க முடியாது.
இதனைக் கருத்திற் கொண்டு தமிழ் மக்களின் நிலங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டு” என்றும், அவர் அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.