ஈரானின் அணு விஞ்ஞானி மொசேன் பக்ரிஷாதே படுகொலை செய்யப்பட்டதை கண்டிப்பதாக, சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மொகமட் ஜவாட் ஷரீபிடம் தெரிவித்துள்ளார்.
ஈரானிய வெளிவிவகார அமைச்சருடன், சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இதன்போது, அணு விஞ்ஞானி மொசேன் பக்ரிஷாதேயின் மரணம் தொடர்பாக, ஈரானிய அரசாங்கத்துக்கு இலங்கை அரசு மற்றம் நாட்டில் மக்களின் சார்பில் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஈரானிய விஞ்ஞானி மீதான தாக்குதலையும் அவர் கண்டித்துள்ளார்.