அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் பதவிப் பிரமாணம் மேற்கொண்டதன் பின்னர் கொரோனா வுக்கு எதிரான தனது 100 நாள் திட்டத்தை அறிவித்துள்ளார்.
டெலாவேரின் வில்மிங்டனில் உள்ள தனது இடைநிலை தலைமையகத்திலிருந்து உரையற்றிய பைடன்,
தனது முக்கிய குறிக்கோள் தடுப்பூசிகளை விநியோகித்தல், பாடசாலைகளை மீண்டும் திறத்தல் மற்றும் அவசியமான இடங்களில் முகக் கவசம் அணிவது என்றும் கூறினார். அத்துடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பைடன் தனது சுகாதார குழுவையும் இதன்போது அறிமுகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.