இந்தியாவில், அவசர பயன்பாட்டுக்கு, கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு, சீரம் இன்ஸ்டிடியூட் (Serum Institute) மற்றும் பாரத் பயோடெக் (Bharat Biotech) நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளதாக, சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
“இந்த நிறுவனங்களுடனும், அதன் விஞ்ஞானிகளுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
விஞ்ஞானிகள் அனுமதி கொடுத்தவுடன், கொரோனா தடுப்பு மருந்து அதிகளவில் உற்பத்தி செய்யப்படும்.
குறுகிய காலத்தில் அதிக மருந்து உற்பத்தி செய்யவும், அனைவருக்கும் கிடைப்பதற்கான அனைத்து திட்டங்களும் தயாராக உள்ளன.
இந்தியாவில் 6 தடுப்பு மருந்துகள் ஆரம்ப கட்ட பரிசோதனையில் உள்ளன. சில மருந்துகளுக்கு இன்னும் சில வாரங்களில் அனுமதி வழங்கப்பட்டு விடும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.