எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாத தரம் குறைந்த தொற்று நீக்கிகளை சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர், பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகவும் பெரிய அளவிலான எதனோல் சந்தைக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சந்தையில் தரம் குறைந்த தொற்று நீக்கி காணப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் உயர்தர தரமுடையவற்றில் 80 சதவீதம் எதனோல் இருக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக சோதனைகளை மேற்கொள்வதற்கு விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.