தாய்வானுக்கு மற்றுமொரு தொகுதி ஆயுதங்களை விற்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக தாய்வானுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது.
எந்த நேரத்திலும் தாய்வான் மீது சீனா தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படும் நிலையில் டிரம்ப் நிர்வாகம் தாய்வானுக்கு மற்றுமொரு தொகுதி ஆயுதங்களை விற்க முன்வந்துள்ளது.
புதிய ஆயுத விற்பனை 280 மில்லியன் டொலர் பெறுமதியானது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தாய்வானைக் கைப்பற்றுவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராக, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சீனா எச்சரித்துள்ளது.