பெருவில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த கைதிகளை தப்ப வைப்பதற்காக சிறையிலிருந்து தோண்டப்பட்ட சுரங்க பாதையை அந்நாட்டுப் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
அந்நாட்டின் காஸ்ட்ரோ சிறைச்சாலையிலுள்ள உணவு விடுதியின் பக்கவாட்டில் தோண்டப்பட்ட அந்த சுரங்கப்பாதை, சிறையின் அருகாமையில் சுமார் 180 மீற்றர் தொலைவிலுள்ள ஒரு வீட்டில் முடிவடைகிறது.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த கைதிகளை தப்ப வைப்பதற்காகவும், சிறைக்குள் போதைப் பொருட்களை கொண்டு வருவதற்காகவும் சுரங்கப்பாதை தோண்ட பட்டிருக்கலாம் என அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.