ஃபைசர்-பயோஎன்டெக் தாயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு கனடிய சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது.
பல்வேறு அவதானிப்புக்களை அடுத்து கனடிய சுகாதரத்துறை அனுமதியை வழங்கியுள்ளதோடு தடுப்பூசி விநியோக குழு தனது நடவடிக்ககளை ஆரம்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த அனுமதியை அடுத்து அடுத்த வாரத்தின் முதற் பகுதியில் முதலாவது தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் சுகாதார துறை குறிப்பிடுகின்றது.
கனடாவில் கொரோனா தடுப்பினை மேற்கொள்ளும் போராட்டத்தில் இதுவொரு வரலாற்று தருணம் என்றும் கனடிய சுகாதார துறை விவரித்துள்ளது.