பைசர் (Pfize) மற்றும் பயோஎன்டெக்(BioNTech) கொரோனா தடுப்பூசியின் முதற்கட்டம் இந்த மாதத்தின் இறுதிக்குள் கனடாவை வந்தடையுமென பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்தார்.
முதலாவது கட்டத்தில் 2 இலட்சத்து 49 ஆயிரம் மருந்தளவுகள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தடுப்பூசி மீளாய்வு நடவடிக்கை மிகவும் கடுமையானதாக இருந்ததெனவும், உறுதியான கண்காணிப்புப் பொறிமுறைகளைக் அரசு கொண்டிருக்கிறதெனவும் கனேடியர்கள் நம்பிக்கை கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.