‘நாட்டில் ஜனநாயகத்தை ஒடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்தின் கருத்திற்கு எதிர்வினையாற்றும் வகையில் கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தனது கீச்சகப் பக்கத்தில், “பிரதமா் நரேந்திர மோடி ஆட்சியில் சீா்திருத்தம் என்பது திருட்டுக்குச் சமம். அதற்காக அவா்களுக்கு ஜனநாயகத்தை ஒடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்த சீா்திருத்தங்களை கொண்டு வருவதற்கு அரசியல் வலிமையும் தேவைப்படுகிறது. மேலும் பல சீா்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.