சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் நாளை முதல் பணிகளை ஆரம்பிக்க வுள்ளனர் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித் துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக நிமல் ஜீ புஞ்சி ஹேவா நியமிக்கப்பட்டுள்ளதோடு எம்.எம்.மொஹமட் , எஸ். பி .திவாரத்ன, கே. பி. பி. பத்திரண மற்றும் ஜீவன் தியாகராஜா ஆகியோர் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் இதற்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளராக கடமையாற்றிய மகிந்த தேசப்பிரிய ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது