பருத்தித்துறை- துன்னாலை பிரதேசத்தில், வெள்ளத்தில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துன்னாலையைச் சேர்ந்த, 34 வயதுடைய, கிருஷ்ணபிள்ளை சிவகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர், நேற்று மாலை வெளியில் சென்றிருந்தார் என்றும், அதன் பின்னர் வீடு திரும்பாத நிலையில், இன்று காலை அவர் வெள்ளத்தில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
துன்னாலை வடக்கு மெதடிஸ்த தமிழ்க் கலவன் பாடசாலைக்குக்கு பின் பகுதியில் உள்ள ஒழுங்கையில் அவருடைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர் நேற்றிரவு வெள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.