கனடாவில் பைசர் (Pfize) மற்றும் பயோஎன்டெக்(BioNTech) கொரோனா தடுப்பூசி 16 வயதானோருக்கும், அதற்கு மேற்பட்டோருக்கும் உரியதென வரையறுக்கப்பட்டுள்ளதாக ஆரம்பத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
பைசர் (Pfize) மற்றும் பயோஎன்டெக்(BioNTech) தடுப்பூசி அனைத்து வயதான சிறுவர்களிலும் பயன்படுத்துவதற்கான மேலதிக மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ளப்படுகின்றது. அந்த ஆய்வுகளின் தரவுகள் மற்றும் முடிவுகளைப் பொறுத்தே எதிர்காலத்தில் சிறுவர்களுக்கும் இந்தத் தடுப்பு மருந்து வழங்கப்படலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் கனடிய சுகாதாரத்துறையும், பொதுசுகாதாரத்துறையின் முகாமைத்தவமும் அதிக கரிசனையுடன் செயற்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.




