கொரோனா பாதிப்பிலிருந்து அனைத்து கனடியர்களையும் பாதுகாத்தல் மற்றும் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்களில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்தார்.
பிரதமர் ஜஸ்ரின் ரூடோவிற்கும் முதலமைச்சர்களுக்கமான கலந்துரையாடலொன்று மெய்நிகர் வாயிலாக இடம்பெற்றது. இதன்போது பிரதமர் தனது உரையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அதனைத்து கனடியர்களுக்கு கொரோனா தொற்றுத் தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பது தனது இலக்காக உள்ளதாகவும் அதனை அடுத்த வருட இறுதிக்குள் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.