கிழக்கு மாகாணத்தில் முதலாவது கொரோனா தொற்று மரணம் நேற்று பதிவாகியுள்ளது.
கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட நிலையில், கல்முனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று மரணமடைந்துள்ளார் என்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர், சம்மாந்துறையைச் சேர்ந்தவர் என்றும், இவரது மரணத்தையடுத்து, சிறிலங்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 147 ஆக உயர்ந்துள்ளது எனவும், தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலேயே அங்கு முதலாவது மரணம் பதிவாகியுள்ளது.